என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மருத்துவர் பலி
நீங்கள் தேடியது "மருத்துவர் பலி"
அமெரிக்காவின் சிகாகோ நகரில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஐதராபாத் நகரை சேர்ந்த பல் மருத்துவர் உயிரிழந்தார். #Indiandentist #USroadaccident #ArshadMohammed #dentistArshadMohammed
நியூயார்க்:
ஐதராபாத் நகரின் விகாராபாத் பகுதியில் உள்ள ஸ்ரீ சாய் பல் மருத்துவ கல்லூரியில் பயின்ற அர்ஷத் முஹம்மத் என்பவர் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். சிகாகோ நகரில் உள்ள இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் பல் மருத்துவம் தொடர்பான உயர்நிலை பட்டம் பெற்ற அர்ஷத், அங்கேயே பட்டமேல் படிப்பு சான்றிதழ் பெறுவதற்கான பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், சிகாகோ நகரில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் சிக்கிய அர்ஷத் முஹம்மத் பரிதாபமாக உயிரிழந்தார்.
சிகாகோ நகரில் உள்ள போர் வீரர்கள் நினைவுச்சினம் சாலையில் தவறான பாதையில் எதிரே வந்த ஒரு வேன் அர்ஷத் ஓட்டிவந்த காரின் மீது மோதிய விபத்தில் அர்ஷத் முஹம்மத்(32) மற்றும் வேனின் டிரைவர் ராபர்ட் வெலாஸ்க்கோ(36) இருவரும் உயிரிழந்தனர்.
அர்ஷத் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவர் பயின்றுவந்த மருத்துவக் கல்லூரிக்கு கடந்த வெள்ளிக்கிழமை பொது விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. #Indiandentist #USroadaccident #ArshadMohammed #dentistArshadMohammed
×

X